/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை தனியார் மயமாவதை கண்டித்து மனித சங்கிலி
/
மின்துறை தனியார் மயமாவதை கண்டித்து மனித சங்கிலி
ADDED : ஆக 23, 2024 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில், மின்துறை தனியார்மயம் ஆவதை கண்டித்து மா.கம்யூ., சார்பில், மனித சங்கிலி போராட்டம், நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் இருந்து மிஷன் வீதி வரை நடந்தது.
போராட்டத்தில், மாநில மற்றும் மத்திய அரசு மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கி, பேசினார்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், பிரபுராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

