/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணிற்கு மிரட்டல் கணவன், மனைவி கைது
/
பெண்ணிற்கு மிரட்டல் கணவன், மனைவி கைது
ADDED : மார் 07, 2025 04:53 AM
காரைக்கால : காரைக்கால் நெடுங்காடு நல்லாத்துாரை சேர்ந்த செல்வராஜ் மனைவி மரியம்மாள். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி மனைவி காமாட்சி, 28; என்பவருக்கும் வங்கி குழுக்கள் மூலம் கடன் வாங்கும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கணேசமூர்த்தி மற்றும் காமாட்சி ஆகியோர் மரியம்மாளிடம் குழு மூலம் கடன் பெற்றுதரறுமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து, மாரியம்மாள் தனியார் வங்கியில் இருந்து 85 ஆயிரம் ரூபாய் லோன் வாங்கி, காமாட்சியிடம் கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் கொடுத்த பணத்தை கேட்ட மரியம்மாளை, காமாட்சி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின்பேரில், நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து காமாட்சி, கணேசமூர்த்தியை கைது செய்தனர்.