/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டைவர்ஸ் மனைவியை மிரட்டிய கணவர் கைது
/
டைவர்ஸ் மனைவியை மிரட்டிய கணவர் கைது
ADDED : ஜூன் 03, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : விவாகரத்தான மனைவியை மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 34 வயது பெண்; மரக்காணம் அரசு வங்கியில் பணி செய்து வருகிறார். குடும்ப பிரச்னையில் விசாகப்பட்டிணத்தை சேர்ந்த கணவர் கல்யாண் சக்கரவர்த்தி, 40, கடந்த 2016ல் விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில், விவாகரத்தான மனைவியின் வீட்டிற்கு சென்று, கல்யாண்சக்கரவர்த்தி அவரை அவதுாறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, கல்யாண் சக்கரவர்த்தியை கைது செய்தனர்.