/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குழந்தையுடன் கணவர் மாயம் மனைவி போலீசில் புகார்
/
குழந்தையுடன் கணவர் மாயம் மனைவி போலீசில் புகார்
ADDED : செப் 08, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கைக்குழந்தையுடன் காணமால் போன கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மூலக்குளம் திருமலை நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 37. சிறு தொழில் செய்து வருகிறார். இதற்காக மனைவியின் நகையை அடமானம் வைத்துள்ளார். இதனை மனைவி சுமதி கண்டித்தார். இதனால் மனமுடைந்த சதீஷ்குமார், நேற்று முன்தினம் மாலை மனைவி வேலைக்கு சென்ற நேரத்தில் தனது கை குழந்தையுடன் சதீஷ்குமார் மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனர்.