/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை
/
மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை
ADDED : ஜூன் 26, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : முதலியார்பேட்டை அடுத்த வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சஜி நாராயணன், 45; சோப் ஆயில் கடை நடத்தி வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், வீட்டில் இருந்தே தொழில் செய்து வந்தார்.
கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. அதையடுத்து, கணவரிடம் கோபித்து அவரது மனைவி வெளியில் சென்றார். அதில் மனமுடைந்த சஜி நாராயணன் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.