தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி பிரிந்ததால் கணவன் தீக்குளிப்பு

மனைவி பிரிந்ததால் கணவன் தீக்குளிப்பு

மனைவி பிரிந்ததால் கணவன் தீக்குளிப்பு


ADDED : ஜூலை 23, 2024 02:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2024 02:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : மனைவி பிரிந்த சோகத்தில் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

காரைக்கால் நிரவி ஊழியபத்து பகுதியை சேர்ந்த கார்த்திகேசன், 35; கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதிகா இவர்களுக்கு இருபிள்ளைகள் உள்ளனர்.

கார்த்திகேசன் குடிப்பழக்கத்தை நிறுத்ததால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி ராதிகா தனது பிள்ளைகளுடன் அவரது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வருகின்றார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகேசன் கடந்த 16ம் தேதி அப்பகுதியில் உள்ள இடுகாடு பகுதியில் உடலில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருந்துவனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி கார்த்திகேசன் நேற்று முன்தினம் இறந்தார்.

இது குறித்து நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us