தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பா.ம.க., யோசனை

நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பா.ம.க., யோசனை

நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பா.ம.க., யோசனை


ADDED : ஆக 28, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரோடியர் மில் ரயில்வே கேட்டை திறந்து வைத்திருக்க வேண்டும் என, பா.ம.க., வலியுறுத்தி உள்ளது.

பா.ம.க., கிழக்கு மண்டல மாநில அமைப்பாளர் கோபாலக்கிருஷ்ணன் அறிக்கை:

புதுச்சேரி – கடலுார் சாலையில் ரோடியர் மில் அருகே நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணிகளால், நகரயில் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என, தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, மேம்பாலப் பணிகள் நிறைவடையும் வரை பொது மக்களின் நலனை கருதி, மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். 

ரயில் வரும் நேரத்தை தவிர்த்து காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை ரோடியர் மில் ரயில்வே கேட்டை தற்காலிகமாக திறந்து, இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்களுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும். முதலியார்பேட்டையில் இருந்து புதுச்சேரி நகரை நோக்கி வரும் இலகுரக வாகனங்களுக்கு ஒருவழிப் பாதை ஏற்பாடு செய்தால், போக்குவரத்து நெரிசல் குறைந்து, மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்வோரின் சிரமத்தை தவிர்க்க முடியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us