/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுவெளியில் குப்பை கொட்டினால் நடவடிக்கை:ஆணையர் எழில்ராஜன் எச்சரிக்கை
/
பொதுவெளியில் குப்பை கொட்டினால் நடவடிக்கை:ஆணையர் எழில்ராஜன் எச்சரிக்கை
பொதுவெளியில் குப்பை கொட்டினால் நடவடிக்கை:ஆணையர் எழில்ராஜன் எச்சரிக்கை
பொதுவெளியில் குப்பை கொட்டினால் நடவடிக்கை:ஆணையர் எழில்ராஜன் எச்சரிக்கை
ADDED : மே 31, 2024 02:33 AM
புதுச்சேரி: பொதுவெளியில் குப்பைகள் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் எச்சரித்துள்ளார்.
அவரது செய்திக் குறிப்பு:
புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் அறிவுறுத்தலின்பேரில், குப்பை இல்லாத புதுச்சேரி என்ற நோக்கத்தோடு மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கடைகள் மற்றும் வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து ஹெச்.ஆர் ஸ்கொயர் தனியார் நிறுவன ஊழியர்களிடம் வழங்கவேண்டும்.
குப்பைகளை சாலையில் வீசக்கூடாது. அவ்வாறு வீசினால் கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட இறைச்சி விற்பனை கடை நடத்துபவர்கள், அதன் கழிவுகளை அரசு விதிமுறைகளின் படி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலம் அப்புறப்படுத்த வேண்டும். சாலையோரம் மற்றும் நீர்நிலை ஓரங்களில் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
தொழிற்சாலை கழிவுகளை அரசு அனுமதி பெற்ற நிறுவனங்கள் மூலமாக அப்புறப்படுத்த வேண்டும்.
அனுமதி இல்லாத நிறுவனங்கள் மூலமாக பொது வெளியில் குப்பைகள் கொட்டப்படுவது தெரிய வந்தால்அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்வதுடன், கொம்யூன் பஞ்சாயத்து சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.