/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் 2 மாதத்தில் புதுச்சேரியில் பா.ஜ., தனித்து ஆட்சி அமைக்கும்; அ.தி.மு.க., அன்பழகன் 'திடுக்'

ADDED : ஏப் 02, 2024 05:06 AM

புதுச்சேரி : நமச்சிவாயம் மத்திய அமைச்சர் ஆனால், முதல்வர் ரங்கசாமி துாக்கி எறிப்படுவார் அ.தி.மு.க., மாநில செயலாளர் என அன்பழகன் பேசினார்.
புதுச்சேரியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் தமிழ்வேந்தனை ஆதரித்து லாஸ்பேட்டையில் நேற்று காலை அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது;
தேர்தலில் சீட்டுக்காக அறிவாலயம் கதவை காங்., பிடித்து கொண்டு கெஞ்சுகிறது என பேசிய தி.மு.க., இன்று காங்., வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பது எதற்கு. தி.மு.க., காங்., கூட்டணி ஆட்சியில் தான் ரேஷன் கடை மூடப்பட்டது.
15 ஆண்டுகளாக தி.மு.க., காங்., கூட்டணி அமைத்து ஆட்சி செய்தும் புதுச்சேரிக்கு ஏன் மாநில அந்தஸ்து பெற்றுதரவில்லை, மாநில கடனும் தள்ளுபடி செய்யவில்லை.கடந்த 5 ஆண்டுகள் எம்.பி.,யாக இருந்த வைத்திலிங்கம், மத்திய அரசிடம் வாதாடி ஒரு திட்டமும் கொண்டுவரவில்லை.
நமச்சிவாயம் காங்., கட்சியில் இருந்தபோது தான் ரங்கசாமியை வீட்டிற்கு அனுப்பினார்.அதே ரங்கசாமி,நமச்சிவாயத்திற்காக ஓட்டு சேகரிக்கிறார். பா.ஜ., விடம் கொள்ளையடித்த பணம் உள்ளது.ஓட்டுக்கு ரூ. 2000 கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அது மக்களை சுரண்டி கொள்ளையடித்த பணம்.நீங்கள் வாங்கி கொண்டு, அ.தி.மு.க.விற்கு ஓட்டு அளியுங்கள்.
மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும், 2 மாதத்தில்பா.ஜ., மட்டுமே தனித்து புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும். இதற்காக சில எம்.எல்.ஏ.க்களை விலைபேசி வைத்துள்ளனர். 2011ம் ஆண்டு அ.தி.மு.க., என்.ஆர். கூட்டணி அமைத்ததால்ரங்கசாமி முதல்வரானார்.2016 அ.தி.மு.க. கூட்டணி இல்லாததால் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தார். 2021 அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால் ரங்கசாமி முதல்வரானார். ரங்கசாமிக்கு அ.தி.மு.க. தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. அ.தி.மு.க. இல்லை என்றால் ரங்கசாமி காலிடப்பா என பேசினார்.