/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் மா.கம்யூ., எச்சரிக்கை

ADDED : ஜூன் 18, 2024 04:55 AM
புதுச்சேரி: மின் கட்டணத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் என மா.கம்யூ., கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை;
புதுச்சேரி அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது, ஏழை எளிய நடுத்தர மக்களின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் பகல் கொள்கை. கட்டண உயர்வு, வரி உயர்வு, அபராதம் என சமானிய மக்கள் பாதிக்கும் போக்கினை என்.ஆர். பா.ஜ., கூட்டணி அரசு நிறுத்தி கொள்ள வேண்டும்.
புதிய வேலை வாய்ப்பு உருவாக்க, அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை முழுமையாக நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. நிரப்பட்ட பணியிடங்கள் கூட ஆட்சியாளர் பணம் பெற்று கொண்டு நிரப்பினர். ஏழை எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், ஆண்டிற்கு 2 அல்லது 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தி தனியாருக்கு சாதகமான நிலையை உருவாக்க ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இதனை மா.கம்யூ., ஒரு போதும் அனுமதிக்காது. கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.