/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் மின்துறை தனியார் மயமாக்கும் முடிவு நிறுத்தப்படும்
/
இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் மின்துறை தனியார் மயமாக்கும் முடிவு நிறுத்தப்படும்
இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் மின்துறை தனியார் மயமாக்கும் முடிவு நிறுத்தப்படும்
இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் மின்துறை தனியார் மயமாக்கும் முடிவு நிறுத்தப்படும்
ADDED : ஏப் 01, 2024 06:43 AM

புதுச்சேரி : இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கும் முடிவு நிறுத்தப்படும் என காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. உறுதி அளித்தார்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் காங்., எம்.பி. வைத்திலிங்கம், மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக புதுச்சேரி முழுதும் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டுவருகிறார். நேற்று காலை காமராஜர் நகர் தொகுதியில், சாமிப்பிள்ளைத்தோட்டம், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், சாரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பிரசாரத்தில் வைத்திலிங்கம் பேசியதாவது; புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை பா.ஜ., வேட்பாளராக களம் இறங்கியுள்ள நமச்சிவாயம் மேற்கொண்டார். மின்துறை ஊழியர்கள் நீதிமன்றம் சென்றதால், அத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மின்துறை தனியார் மயமானால், மின் கட்டணம் அதிகரிக்கும். அடிக்கடி மின்தடை ஏற்படும். இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் தான் மின் துறை தனியார் மயமாக்கும் திட்டம் முழுதுமாக தடுத்து நிறுத்தப்படும்.
மின்துறை தனியார் மயமானால், அதானிக்கு விற்றுவிடுவர். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே அதனைதடுக்க முடியும் என கூறினார்.
மயங்கி விழுந்த வைத்திலிங்கம்
திறந்த வேனில் பிரசாரம் செய்த வைத்திலிங்கம், 74; எம்.பி. வெங்கட்டா நகர், 2வது குறுக்கு தெரு, வள்ளலார் நகர் சந்திப்பு அருகே நேற்று காலை 11:00 மணிக்கு சென்றபோது, திடீரென மயங்கி சரிந்தார். அருகில் நின்றிருந்த வைத்தியநாதன் எம்.எல்.ஏ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் தாங்கி பிடித்து வேனில் இருந்து இறங்கி அருகில் உள்ள வீட்டில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். டாக்டர் வரவழைத்து பரிசோதனை செய்தனர்.
கோடை காலம் என்பதால் பிரசாரத்தின் போது அடிக்கடி தண்ணீர், பழச்சாறு கொடுக்க அறிவுரை வழங்கி சென்றனர். 20 நிமிட ஓய்வுக்கு பின்பு உடைகளை மாற்றிக் கொண்டு மீண்டும் பிரசாரத்தை துவக்கினார்.

