/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வியாபாரிகள் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டினால் உரிமம் ரத்து
/
வியாபாரிகள் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டினால் உரிமம் ரத்து
வியாபாரிகள் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டினால் உரிமம் ரத்து
வியாபாரிகள் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டினால் உரிமம் ரத்து
ADDED : ஜூன் 04, 2024 04:06 AM
அரியாங்குப்பம், : கடை வியாபாரிகள் குப்பைகளை வெளியில் கொட்டினால் அபராதம் விதித்து உரிமம் ரத்து செய்யப்படும் என ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பல இடங்களில் கோழி இறைச்சி கழிவுகளை சாலையோரத்தில் கொட்டப்படுகிறது.
மேலும், கிராமப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரித்து, குப்பைகளை சேகரிப்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அரியாங்குப்பம் கொம்யூன் சார்பில் கடந்த மாதம் 21ம் தேதி விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
மேலும், அரியாங்குப்பம் பகுதியில் வணிக வளாகம், திருமண மண்டபங்கள், கோழி இறைச்சி கடைகளில் இருந்து குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு வருகிறது. அதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. அதனை தவிர்க்க மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து, குப்பைகளை வாகனங்கள் மூலம் வாங்க வரும் ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மீறி வியாபாரிகள் தங்களின் கடைகளின் முன்பு சாலையோர பகுதியில் குப்பைகளை கொட்டினால், அபராதம் வீதித்து, கடை உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.