/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர் நடத்தும் பாடங்களை அன்றே படித்தால் சாதிக்கலாம் முதலிடம் பிடித்த அமலோற்பவம் மாணவர் 'டிப்ஸ்'

ADDED : மே 11, 2024 04:43 AM
புதுச்சேரி: ஐ.ஏ.எஸ்., ஆவதே எதிர்கால லட்சியம் என பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் 2ம் இடம் பிடித்த புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர் பரத்குமார் கூறியுள்ளார்.
புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர் பரத்குமார் பத்தாம் வகுப்பு தேர்வில் 498 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் மாநில அளவில் 2ம் இடத்தையும், புதுச்சேரியில் முதலிடம் பிடித்துள்ளார்.
இவர், தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரது தந்தை சந்திரமூர்த்தி,46; துபாயில் சிவில் இன்ஜினியராக உள்ளார். தாயார் அம்பிகா,42; மகனின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.
மாணவர் பரத்குமாரை பள்ளியின் முதுநிலை முதல்வர் லுார்துசாமி சால்வை அணிவித்து பாராட்டினர்.
மாணவர் பரத்குமார் கூறியதாவது:
பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை அன்றே படித்து முடித்து விடுவேன். மறுநாள் காலை அந்த பாடங்களை மீளாய்வு செய்வேன். இதுவே எனது வெற்றிக்கு கை கொடுத்தது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி அளவில் சாதிக்க உதவியது. எனது வெற்றிக்கு பாடுபட்ட பள்ளி முதல்வர் லுார்துசாமி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளேன்.
மேல்நிலை பிரிவில் உயிரியல் குரூப் படித்து, எதிர்காலத்தில் டாக்டருக்கு படிக்க திட்டமிட்டுள்ளேன். தொடர்ந்து மத்திய தேர்வாணைய தேர்வு எழுதி, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி நாட்டிற்கு பணியாற்றுவேன் என்றார்.