/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ரேஷன் கடை திறக்க வேண்டுமானால் கை சின்னத்திற்கு ஓட்டு அளியுங்கள்': காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் வேண்டுகோள்

ADDED : ஏப் 17, 2024 11:50 PM

புதுச்சேரி : ரேஷன் கடை திறந்து அரிசி போட வேண்டுமானால் கை சின்னத்திற்கு ஓட்டு அளியுங்கள் என வைத்திலிங்கம் தெரிவித்தார்.
புதுச்சேரியில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்துஇறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.நேற்று உப்பளம் மற்றும் ராஜ்பவன் தொகுதியில் பிரசாரம் செய்த அவர், பேசியதாவது:
ராகுல் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார். அதுமட்டுமின்றி பெண்களுக்கு ஆண்டிற்கு ரூ. 1 லட்சம், 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று வாக்குறுதிகளையும் கொடுத்த ராகுல் வெற்றி பெற கை சின்னத்திற்கு ஓட்டு அளியுங்கள் என கூறினார். ராகுல்காந்தி வந்தால் தான் ரேஷன் கடை திறந்து, அரிசி கொடுப்பார்.
2 கோடி பேருக்கு வேலை கொடுத்ததாக மோடி கூறுகிறார். ஆனால், இங்கு ஒருவருக்கும் வேலை கிடைக்கவில்லை. 15 லட்சம் வங்கி கணக்கில் போடுவதாக கூறி ஏமாற்றிவர்.ஆனால் ராகுல் காஸ் சிலிண்டர் ரூ. 500க்கு கொடுப்பதாக கூறியுள்ளார்.
புதுச்சேரியில் வியாபாரம் பெருகவில்லை. அதனால் மக்களும் மகிழ்ச்சியாக இல்லை. இதற்கு ஜி.எஸ்.டி., முக்கிய காரணம். ஜி.எஸ்.டி.யால் வியாபாரம் நசுக்கப்படுகிறது. காங்., வெற்றி பெற்றால் ஜி.எஸ்.டி., வரி அமைப்புகள் மாற்றி அமைத்து எளிமையாக்குவோம்.குறிப்பாக ஜி.எஸ்.டி. மூலம் சிறு வியாபாரிகள் நசுக்கப்படுகின்றனர். சிறு வியாபாரிகளுக்கு சரியான நேரத்தில் கடன் கிடைப்பது இல்லை. தனியாரிடம் கடன் பெற தள்ளப்படுகின்றனர். இவற்றை மாற்ற ஆட்சி மாற்றம் வர வேண்டும்' என கூறினார்.
பிரசாரத்தில் காங்., மற்றும் தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பைக்குகளில் ஊர்வலமாக சென்றனர்.