/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.ஜே.கே., நிர்வாகிகள் மோதல் மாஜி நிர்வாகிக்கு 'பளார்'
/
ஐ.ஜே.கே., நிர்வாகிகள் மோதல் மாஜி நிர்வாகிக்கு 'பளார்'
ஐ.ஜே.கே., நிர்வாகிகள் மோதல் மாஜி நிர்வாகிக்கு 'பளார்'
ஐ.ஜே.கே., நிர்வாகிகள் மோதல் மாஜி நிர்வாகிக்கு 'பளார்'
ADDED : ஏப் 03, 2024 02:52 AM

புதுச்சேரி : பா.ஜ., அலுவலகம் முன், ஐ.ஜே.கே., நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டு, பிரசார வாகனத்தின் பேனரை கிழித்ததால் பரபரப்பு நிலவியது.
லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு இந்திய ஜனநாயககட்சி (ஐ.ஜே.கே.,)ஆதரவு தெரிவித்துள்ளது. பிரசாரம் தொடர்பாக நேற்று காலை 11:30 மணியளவில் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் இருந்த பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி, வேட்பாளர் நமச்சிவாயத்தை சந்தித்து பேசுவதற்கு ஐ.ஜே.கே., நிர்வாகிகள் வந்தனர்.
பா.ஜ., அலுவலகத்தின் வாசலின் வெளியே ஐ.ஜே.கே., - பா.ஜ., பேனர்களுடன் பிரசார வாகனம் நின்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் ஏற்கனவே ஐ.ஜே.கே., கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சத்தியவேல் படமும்அச்சிடப்பட்டிருந்தது.
அதை கண்ட ஐ.ஜே.கே., மாநில நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர். அந்த வாகனத்தில் இருந்த சத்தியவேலை அழைத்து கண்டித்தனர்.கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நீ, எதற்காக ஐ.ஜே.கே., பேனரை போட்டு ஓட்டு கேட்கிறாய். உனக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வாக்குவாதம் முற்றி, அனைவரும் சத்தியவேலை கன்னத்தில் அறைந்து, சராமரியாக தாக்கினர். வாகனத்தில் இருந்த சத்தியவேல் படத்தினை கிழித்தனர். இதயைடுத்து சத்தியவேல் பிரசார வாகனத்துடன் புறப்பட்டு சென்றார்.

