/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் சட்ட விரோத பேனர் விவகாரம் மாவட்ட நிர்வாகம் மீது அவமதிப்பு வழக்கு பாய்கிறது
/
புதுச்சேரியில் சட்ட விரோத பேனர் விவகாரம் மாவட்ட நிர்வாகம் மீது அவமதிப்பு வழக்கு பாய்கிறது
புதுச்சேரியில் சட்ட விரோத பேனர் விவகாரம் மாவட்ட நிர்வாகம் மீது அவமதிப்பு வழக்கு பாய்கிறது
புதுச்சேரியில் சட்ட விரோத பேனர் விவகாரம் மாவட்ட நிர்வாகம் மீது அவமதிப்பு வழக்கு பாய்கிறது
ADDED : ஆக 10, 2024 04:33 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பேனர்கள் விஷயத்தில் கோர்ட் வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத அதிகாரிகள் மீது அவமதிப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்க, ஐகோர்ட் பதிவாளருக்கு, புதுச்சேரி தலைமை நீதிபதி கடிதம் அனுப்பி உள்ளார்.
புதுச்சேரியில் விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்களால் விபத்துகள் ஏற்பட்ட போதிலும், அரசு அதனை கட்டுப்படுத்தவில்லை. கோர்ட் தலையிட்ட மின் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
இந்நிலையில், முதல்வர் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நகரெங்கும் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்து பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.
இது குறித்து புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, அவர் சென்னை ஐகோர்ட் பதிவாளருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், புதுச்சேரியில் பொது இடங்களில் அங்கீகரிக்கப்படாத பேனர்கள் வைக்கக்கூடாது என்ற ஐகோர்ட் உத்தரவு மீறப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வருக்கு கடந்த 4ம் தேதி பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அவரது ஆதரவாளர்கள், தொழிலதிபர்கள் நகரம் முழுவதும் பேனர்கள், கட் அவுட்டுகள், அலங்கார வளைவுகள் போன்றவற்றை வைத்திருந்தனர். இது மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் சட்ட விரோத பேனர்கள், கட் அவுட்டுகள் அமைப்பதை புகாராக தெரிவிக்க அறிவிக்கப்பட்ட வாட்ஸ்-ஆப் எண் 9443383418 நிர்வாக காரணங்களைக் காட்டி மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.
இதனால், சட்ட விரோதமாக பதாகைகள், கட்அவுட்டுகள் பேனர்கள் ஆகியவற்றை அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் ஆதரவாளர்களும் அமைத்துள்ளனர். இதுதொடர்பான செய்திகள் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளன.
சென்னை ஐகோர்ட் வழிகாட்டுகளை கடைபிடிக்காத அதிகாரிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை தேவை. மேலும், புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் மீது அவமதிப்பு நடவடிக்கை உடன் துவங்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.