மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 23 புகார்களுக்கு உடனடி தீர்வு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 23 புகார்களுக்கு உடனடி தீர்வு
ADDED : ஜூன் 06, 2026 08:00 PM

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ்துறை சார்பில் மாநிலம் முழுதும் நேற்று நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 23 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண, புதுச்சேரியில் (புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம்) உள்ள அனைத்துப் பிராந்தியங்களிலும் நேற்று மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது.
லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில், சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., வம்சீதர ரெட்டி, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்களின் புகார்களை பெற்று நடவடிக்கை எடுத்தனர். இதேபோல், சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., ராகவ், புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., திவ்யா, எஸ்.பி., ரச்சனா சிங், சோலை நகர் புறக்காவல் நிலையத்தில், எஸ்.பி., ஸ்ருதி, காடேரிகுப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., சுப்ரமணியன், கரையாம்புத்துார் புறக்காவல்நிலையத்தில், எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், காரைக்காலில், எஸ்.பி., பழனிவேல், டவுன் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., சுபம் சுந்தர் கோஷ், ஏனாமில் எஸ்.பி., வரதராஜன் தலைமையிலும் போலீசார் பொதுமக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கனர்.
இது போல் மாகேவிலும் மக்கள் மன்றம் நடந்தது. நேற்று நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 28 பெண்கள் உட்பட 131பேர் கலந்துகொண்டனர். இதில் பெறப்பட்ட 38 புகார்களில் 23 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
