தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் கணவரை கொன்று நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது

புதுச்சேரியில் கணவரை கொன்று நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது

புதுச்சேரியில் கணவரை கொன்று நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது


ADDED : ஏப் 07, 2024 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2024 11:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி, சாரம் ஞானப்பிரகாசம் நகர், 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாஸ்கர், 48; பெயின்டர். இவரது மனைவி ஷர்மிளா தேவகிருபை, 44. கடந்த, 5ம் தேதி நள்ளிரவு மயங்கிய நிலையில், கதிர்காமம் மருத்துவமனைக்கு பாஸ்கர் கொண்டு செல்லப்பட்டார்.

நெஞ்சு வலி ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்ததாக ஷர்மிளா தேவகிருபை தெரிவித்தார். டாக்டர்கள் பரிசோதித்து, பாஸ்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தனிக்குடித்தனம்


நெஞ்சு வலியால் கணவர் இறந்ததாக ஷர்மிளா தேவகிருபை போலீசில் புகார் அளித்தார். கோரிமேடு போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனையில், கழுத்து நெரித்து, மூச்சு திணறல் ஏற்பட்டு பாஸ்கர் இறந்தது தெரிந்தது. கொலை வழக்காக போலீசார் மாற்றினர். ஷர்மிளா தேவகிருபையிடம் விசாரித்தபோது, கள்ளக்காதலன் சேகர் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, நாடகமாடியது தெரியவந்தது.

போலீசார் கூறியதாவது:


கடலுார், சின்னப்பன் நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சேகர், 43. இவர், புதுச்சேரி, சுந்தரம் மேஸ்திரி வீதியில், 15 ஆண்டுகளாக 'பேக்' தைக்கும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஐந்து ஆண்டுகளாக ஷர்மிளா வேலை பார்த்த போது, சேகருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

கள்ளக்காதல் விவகாரம் பாஸ்கர் குடும்பத்திற்கு தெரிந்ததால் தகராறு ஏற்பட்டு, ஒராண்டிற்கு முன் பாஸ்கர், ஷர்மிளா தேவகிருபை தனிக்குடித்தனம் வந்தனர். கள்ளக்காதலன் சேகருடன் ஷர்மிளாவின் தொடர்பு தொடர்ந்து நீடித்தது.

தலைமறைவு


இதை பாஸ்கர் கண்டித்ததுடன், ஒரு மாதத்திற்கு முன் ஷர்மிளாவை வேலையை விட்டு நிறுத்தினார். இதனால் பாஸ்கரை கொலை செய்ய ஷர்மிளா தேவகிருபை, சேகர் திட்டமிட்டனர்.

சேகர் தன் நண்பரான ஆட்டோ டிரைவர் நெல்லித்தோப்பு, மணிகண்டன், 37, முதலியார்பேட்டை ஆனந்தன், 32, ஆகியோர் உதவியுடன், 5ம் தேதி மாலை பாஸ்கரை சந்தித்து, தொழில் துவங்குவது சம்பந்தமாக பேச வேண்டும் என, அழைத்தனர்.

ஆட்டோவில் பாஸ்கரை அழைத்துக் கொண்டு கோரிமேடு சென்றனர். ஆட்டோவில் செல்லும் போதே மூவரும் பாஸ்கர் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

பின், நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி உயிரிழந்ததாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஷர்மிளா தேவகிருபை நாடகமாடி உள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.

இதையடுத்து, ஷர்மிளா தேவகிருபை, சேகர், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஆனந்தனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us