/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 7 சவரன் செயின் பறிப்பு
/
புதுச்சேரியில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 7 சவரன் செயின் பறிப்பு
புதுச்சேரியில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 7 சவரன் செயின் பறிப்பு
புதுச்சேரியில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 7 சவரன் செயின் பறிப்பு
ADDED : செப் 03, 2024 06:25 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து இரு பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி புதுசாரம், தென்றல் நகர், முதல் மெயின்ரோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜன். இவரது மனைவி பிரேமாவதி, 57; இவர் பக்கத்து தெருவில் வசிக்கும் இவரது சகோதரி கவிதாவை பார்ப்பதற்காக கடந்த 31ம் தேதிஇரவு 9:30 மணிக்கு தென்றல் நகர் 2வது குறுக்கு தெரு வழியாக வெங்கடேஸ்வரா நகருக்கு நடந்து சென்றார்.
அப்போது எதிரே பைக்கில் வந்த 25 வயது மதிக்கதக்க இரு வாலிபர்கள், பிரேமாவதியின் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் செயின் மற்றும் 1 சவரன் நகைகள் கொண்ட தாலி செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர். பிரேமாவதி கோரிமேடு போலீசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் சாரம் கவிக்குயில் நகரைச் சேர்ந்த சரஸ்வதி, 55; நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு நடந்து சென்றார். அப்போது, அங்குள்ள அரசு பள்ளி அருகே பைக்குடன் நின்றிருந்த 2 வாலிபர்கள் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர்.
ஓரே இடத்தில் அடுத்தடுத்து இரு நாட்களில் இரு பெண்களிடம் மர்ம நபர்கள் செயின்பறிப்பில் ஈடுப்பட்ட சம்பவம் அப்பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரேமாவதி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.