/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சட்டசபையில் ரூ. 12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்; மீண்டும் இலவச அரிசி திட்டம் துவக்கம்

ADDED : ஆக 03, 2024 04:45 AM

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் ரூ. 12,700 கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார்.
புதுச்சேரி 15வது சட்டசபையின் 5வது கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி துவங்கியது. நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி நேற்று 2024-25ம் ஆண்டுக்கு ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்:
நடப்பு நிதியாண்டு முதல் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் வழங்கப்படும். பொது சேவை மையம் மூலம் ரேஷன் கார்டுகளின் அனைத்து சேவைகளும் இணையதளம் மூலம் அளிக்கப்படும்.
பிராந்திய அளவில் 10, பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முறையே தலா ரூ. 20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரமும், பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.6,500ஐ ரூ.8,000 ஆகவும், மழைக்கால நிவாரணம் ரூ.3,000ஐ ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் ஆதிதிராவிட, பழங்குடியின வீரர்களின் முழு செலவை அரசு ஏற்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.