/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜன்தன் யோஜனா திட்ட பெயரில் புதுச்சேரியில் நுாதன மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ADDED : மே 25, 2024 12:55 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், ஜன்தன் யோஜனா திட்டத்தின் பெயரில் நுாதன மோசடி அரங்கேறி வருகிறது.
புதுச்சேரியில் தினசரி பல்வேறு வகைகளில் சைபர் கிரைம் மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது புதுவித மோசடி அரங்கேறி வருகிறது.
சமூக வலைதளமான பேஸ்புக்கில், பாரத் ஜன் தன் யோஜனா மூலம் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ. 5000 வரை இலவசமாக அளிக்கப்படுகிறது.
பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வர கீழே உள்ள கார்டை ஸ்கிராட்ச் செய்யவும் என தகவல் வருகிறது. இதை நம்பி கீழே இருக்கும் கார்டை ஸ்கிராட்ச் செய்ததும், இந்திய அரசு முத்திரை, பிரதமர் மோடி படத்துடன் ரூ. 1987 பரிசு விழுந்ததாக வருகிறது. பணத்தை வங்கி கணக்கில் எடுக்க கீழே கிளிக் செய்யவும் என வருகிறது. அதனை கிளிக் செய்ததும், வங்கி கணக்கில் இருந்து பரிசு விழுந்ததாக கூறப்படும் தொகை எடுக்கப்படுகிறது.
இதேபோல் ஜன்தன் யோஜனா மூலம் அனைவருக்கும் ரூ. 2000 என்றும், கீழே உள்ள கார்டை ஸ்கிராட்ச் செய்யவும் என மற்றொரு தகவல் வருகிறது. இப்படி ஏராளமான லிங்க்குகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
விபரம் அறியாத பலரும், மத்திய அரசு தான் ஏதோ பரிசு திட்டத்தை அறிவித்துள்ளதாக கருதி, அந்த கார்டை ஸ்கிராட்ச் செய்து லிங்க் மூலம் உள்ளே சென்று ஆயிரக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரை விசாரித்து வரும் சைபர் கிரைம் போலீசார், சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.