/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தட்சசீலா பல்கலை.,யில் 2024-25ம் கல்வியாண்டு துவக்க விழா
/
தட்சசீலா பல்கலை.,யில் 2024-25ம் கல்வியாண்டு துவக்க விழா
தட்சசீலா பல்கலை.,யில் 2024-25ம் கல்வியாண்டு துவக்க விழா
தட்சசீலா பல்கலை.,யில் 2024-25ம் கல்வியாண்டு துவக்க விழா
ADDED : ஜூலை 28, 2024 06:20 AM

புதுச்சேரி, : தட்சசீலா பல்கலையில் 2024-25ம் கல்வியாண்டு துவக்க விழா நடந்தது.
திண்டிவனம், ஓங்கூர், தட்சசீலா பல்கலை.,யில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல், வேளாண் அறிவியல், உடற்சிகிச்சை, ஒருங்கிணைந்த சுகாதார கல்வி அறிவியல், ஸ்கூல் ஆப் பார்மசி மற்றும் ஓட்டல் மேலாண்மை ஆகிய துறைகள் இயங்கி வருகின்றன.
இதில், கலை மற்றும் அறிவியல், சமூக அறிவியல், வணிக மேலாண்மை ஆகிய துறைகளின், 2024-25ம் கல்வியாண்டின் துவக்க விழா, பல்கலையின் பல்நோக்கு அரங்கில் நடந்தது.
பல்கலை வேந்தர் தனசேகரன் தலைமை தாங்கினார். இணை வேந்தர்கள் ராஜராஜன், நிலா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். கலை மற்றும் அறிவியல் துறையின் முதன்மையர் தீபா வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக சென்னை, சோஹா கார்ப்பரேஷன் முதன்மை மேலாண்மையர் சார்லஸ் காட்வின் கலந்து கொண்டார்.துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சர் வாழ்த்தி பேசினார். பதிவாளர் செந்தில் சிறப்புரையாற்றினார். பல்கலை துறை முதன்மையர் சுப்ரமணியன், மருத்துவத்துறை முதன்மையர் ஜெயஸ்ரீ, இணை பதிவாளர் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆங்கிலத்துறை பேராசிரியர் கலைச்செல்வி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் டீன் சுபலட்சுமி நன்றி கூறினார்.