ADDED : ஆக 16, 2024 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க, புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை, சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
முதலியார்பேட்டை சட்டசபை தொகுதியில் சப்தகிரி நகர், நேரு நகர், ஆதிபராசக்தி நகர் மற்றும் சுற்றி உள்ள பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, வசந்த் நகரில் புதிய ஆழ்துளை கிணறு ரூ.16.44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில் இந்த பணியை, நேற்று சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இதில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் அன்பரசன், இளநிலை பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.