/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் நியாய ஒளி கிளப் துவக்கம்
/
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் நியாய ஒளி கிளப் துவக்கம்
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் நியாய ஒளி கிளப் துவக்கம்
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் நியாய ஒளி கிளப் துவக்கம்
ADDED : செப் 03, 2024 06:26 AM

புதுச்சேரி : பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் நியாய ஒளி கிளப் துவக்கப்பட்டது.
புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரியில், மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் நீதித்துறையின் கீழ் நியாய ஒளி என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது. நியாய ஒளி திட்டத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு அடிப்படை சட்ட விழிப்புணர்வு வழங்குவதற்காக சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் நியாய ஒளி கிளப் துவங்கப்பட்டது. அமைச்சர் நமச்சிவாயம் நியாய ஒளி கிளப்பை துவக்கி வைத்தார்.
கல்லுாரி முதல்வர் வீரமோகன் வரவேற்றார். அம்பேக்கர் அரசு சட்ட கல்லுாரியின் முதல்வர் சீனிவாசன் நோக்கவுரையாற்றினார்.
இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ரீதியாக பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்து விளக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இம்முகாமில், சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். முகாமில், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியின் ஆங்கிலத் துறை உதவி பேராசிரியை சாந்தி, மாணவிகள் செய்திருந்தனர்.
தமிழ்துறைத் தலைவர் கிருங்கை சேதுபதி நன்றி கூறினார்.