/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீர் உந்து நிலையம் துவக்கி வைப்பு
/
நீர் உந்து நிலையம் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 01, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : நீர் உந்து நிலையத்தை சபாநாயகர் துவக்கி வைத்தார்.
தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
அதை போக்கும் வகையில் பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டம் மூலம் 17 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவக்கப்பட்டது. தொடர்ந்து, அபிஷேகப்பாக்கம் பகுதியில் 14 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் நீர் உந்து நிலையத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் உமாபதி உட்பட பலர் பங்கேற்றனர்.