ADDED : ஜூலை 30, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: திருவாண்டார்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் மையம் திறப்பு விழா நடந்தது.
ஆசிரியை ஷாலினி வரவேற்றார். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி மையத்தை துவக்கி வைத்தார். ஆசிரியை பிரபாவதி திட்டத்தை விளக்கி பேசினார். உல்லாஸ் எனும் புதிய பாரத கல்வியறிவு திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேல் உள்ள படிக்காதவர்களுக்கு கல்வியை அளித்திடவும், புதுச்சேரியை 100 சதவீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் நோக்கத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பள்ளியில் ஒரு வகுப்பறை உல்லாஸ் கற்பித்தலுக்கு ஒதுக்கப்பட்டு தன்னார்வலர்கள் ஆசிரியர்களை கொண்டு இந்த மையத்தை செயல்படுத்த உள்ளனர். பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை லட்சுமி நன்றி கூறினார்.