/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நவசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா துவக்கம்
/
நவசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா துவக்கம்
நவசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா துவக்கம்
நவசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா துவக்கம்
ADDED : ஆக 22, 2024 12:46 AM
புதுச்சேரி, : திலகர் நகர் நவசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நாளை 23ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி திலகர் நகர், பேட்டையான்சத்திரம், நவசக்தி விநாயகர், நவசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவக்கிரக, கோ பூஜை நடந்தது. மாலையில் முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று 22ம் தேதி இரண்டாம் கால பூஜை, கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, மாலை மூன்றாம் கால பூஜை நடக்கிறது.
நாளை 23ம் தேதி காலை நான்காம் கால பூஜை, காலை 8:30 மணிக்கு கடம் புறப்பாடு, கும்பாபிேஷகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.