/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்துச்செட்டிப்பேட்டை பள்ளியில் புதிய டைனிங் ஹால் திறப்பு விழா
/
பெத்துச்செட்டிப்பேட்டை பள்ளியில் புதிய டைனிங் ஹால் திறப்பு விழா
பெத்துச்செட்டிப்பேட்டை பள்ளியில் புதிய டைனிங் ஹால் திறப்பு விழா
பெத்துச்செட்டிப்பேட்டை பள்ளியில் புதிய டைனிங் ஹால் திறப்பு விழா
ADDED : ஏப் 10, 2024 01:56 AM

புதுச்சேரி : பெத்துச்செட்டிப்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில், மாணவர்கள் உணவு உண்ணும் அறைக்கான கட்டடம் திறப்பு விழா நடந்தது.
பெத்துச்செட்டிப்பேட்டை, அரசு தொடக்கப்பள்ளியில், ரோட்டரி கிளப் போர்ட் சார்பில், 300 மாணவர்கள் அமரக்கூடிய வகையில், உணவு உண்ணும் அறைக்கான கட்டடப்பணி சமீபத்தில் நிறைவடைந்தது.
இதன் திறப்ப விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், கலைவாணி வரவேற்றார். பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி கட்டடத்தை திறந்து வைத்தார். கட்டடம் கட்ட உதவிய நன்கொடையாளர்கள் வசுமதி மற்றும் அகிலா ஆகிய இருவரும், கல்வெட்டை திறந்து வைத்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக, ரோட்டரி கிளப் போர்ட் தலைவர் ராஜேஷ் சுந்தரமூர்த்தி, செயலர் கணேஷ் மூக்கையா, கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை, இசையமுது தொகுத்து வழங்கினார்.
பெண்கல்வி துணை இயக்குநர் சிவராமன் மற்றும் பள்ளித்துணை ஆய்வாளர் குலசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, பள்ளி தலைமை ஆசிரியர் தமயந்தி ஜாக்குலின், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் செய்தனர்.

