/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தியால்பேட்டை தொகுதியில் புதிய தார்சாலை திறந்து வைப்பு
/
முத்தியால்பேட்டை தொகுதியில் புதிய தார்சாலை திறந்து வைப்பு
முத்தியால்பேட்டை தொகுதியில் புதிய தார்சாலை திறந்து வைப்பு
முத்தியால்பேட்டை தொகுதியில் புதிய தார்சாலை திறந்து வைப்பு
ADDED : செப் 16, 2024 05:21 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட மஞ்சினி நகர் பகுதியில் சொந்த செலவில் சாலை அமைத்து கொடுத்த தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணனுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
முத்தியால்பேட்டை தொகுதி வ.உ.சி. நகர் அடுத்த மஞ்சினி நகர் பகுதியில் சாலை, வாய்க்கால் வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வந்தனர்.
அப்பகுதி மக்கள் மஞ்சினி நகர் பகுதிக்கு சாலை, வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தர வேண்டி, தொகுதியின் முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., நந்தா சரவணனை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதையேற்று முன்னாள் எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் அந்த பகுதியில் புதிதாக தார் சாலை மற்றும் வாய்க்கால் அமைத்து தந்தார். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் சாலை பெயர் பலகையை திறந்து வைத்து அப்பகுதி மக்களுக்கு அர்பணித்தார்.
நிகழ்ச்சியில், தி.மு.க., தொகுதி செயலாளர் சவுரிராஜன் மற்றும் தி.மு.க., கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திறப்பு விழாவுக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணனுக்கு அப்பகுதி மக்கள் மேளதாளத்துடன் மலர் துாவி வரவேற்றனர்.