/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பதவியேற்பு
/
மாநில மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஏப் 01, 2024 06:46 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக மீனவர் அணி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீனவர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன், பதவி ஏற்பு விழா மற்றும் பாராட்டு விழா, தட்டாஞ்சாவடி தலைமை அலுவலகத்தில் நடந்தது. சேர்மன் வெங்கட்ராமன் வரவேற்றார்.
தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கி, புதிய நிர்வாகிகளுக்கு பதவியேற்பு செய்து வைத்தார். பொதுச் செயலாளர் ராஜன் வாழ்த்துரை வழங்கினார். புதிய மீனவர் அணி தலைவராக, சந்திரன் பொறுப்பேற்றார்.
இவரை தொடர்ந்து, துணைத் தலைவர்களாக, குமார், ரஞ்சித் செயலாளர்களாக சுகுமார், தனஞ்செயன் துணை செயலாளர்களாக, நாகமுத்து, மஞ்சினி, ரவி, சேகர், இணைச் செயலாளர்களாக, வினோத் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள், உயர் மட்ட குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் பரந்தாமன் நன்றி கூறினார்.

