/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கள்ளச்சாராய சம்பவங்கள் அ.தி.மு.க., ஆட்சியிலும் நடந்துள்ளது; மாஜி முதல்வர் நாராயணசாமி
/
கள்ளச்சாராய சம்பவங்கள் அ.தி.மு.க., ஆட்சியிலும் நடந்துள்ளது; மாஜி முதல்வர் நாராயணசாமி
கள்ளச்சாராய சம்பவங்கள் அ.தி.மு.க., ஆட்சியிலும் நடந்துள்ளது; மாஜி முதல்வர் நாராயணசாமி
கள்ளச்சாராய சம்பவங்கள் அ.தி.மு.க., ஆட்சியிலும் நடந்துள்ளது; மாஜி முதல்வர் நாராயணசாமி
ADDED : ஜூன் 25, 2024 06:41 AM
புதுச்சேரி : கள்ளச்சாராய சம்பவங்கள் வழக்கமானது, இதற்கு முன்பு அ.தி.மு.க., ஆட்சியிலும் நடந்திருக்கிறது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில்:
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்பட்டு மோசடி நடந்திருப்பது வெளியாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக கல்லுாரி, கோச்சிங் சென்டர் மாபியாக்கள் கையில் நீட் தேர்வு சென்றுவிட்டது.
தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும், கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பு தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இது தி.மு.க., ஆட்சியில் மட்டும் இன்றி அ.தி.மு.க., ஆட்சியில் காலத்திலும் நடந்து வந்தது. ஆனால், கள்ளச்சாராயம் எங்கிருந்து வந்தது. மெத்தனாலை யார் வியாபாரிகளுக்கு கொடுத்தார்கள் என சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது.
தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரை குறை கூறாதீர்கள் . தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய கோரிக்கை வைக்கிறார். மெத்தனால் கடத்தலில் மடுகரையைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனால் முதல்வர் ரங்கசாமியை ராஜினாமா செய்ய அண்ணாமலை கூறுவாரா. முதற்கட்ட விசாரணையில் புதுச்சேரி நபர்களுக்கும் மெத்தனால் கடத்தலில் தொடர்பு இருப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் இறந்ததால் பெரிய பிரச்னையாகி விட்டது. புதுச்சேரியில் வருமானம் பெருக்க நிறைய வழிகள் உள்ளது.
அதனால் மதுபான கடைகள் ரெஸ்டோ பார்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். சாராய கடைகளை மூட வேண்டும் என கூறினார்.