sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இ.சி.ஆரில் அதிகரிக்கும் விபத்துகள் தடுப்பு கட்டை  உயரம் அதிகரிக்கப்படுமா?

இ.சி.ஆரில் அதிகரிக்கும் விபத்துகள் தடுப்பு கட்டை  உயரம் அதிகரிக்கப்படுமா?

இ.சி.ஆரில் அதிகரிக்கும் விபத்துகள் தடுப்பு கட்டை  உயரம் அதிகரிக்கப்படுமா?


ADDED : மே 06, 2024 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2024 05:58 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : இ.சி.ஆரில் சாலையில் அதிகரிக்கும் விபத்துகளை குறைக்க தடுப்பு கட்டைகளின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்.

காலாப்பட்டு இ.சி.ஆரில் சாலை விபத்துகளை குறைக்க சாலையின் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரிய இடைவெளியுடன் திட்டு திட்டாக அமைக்கப்பட்ட இந்த தடுப்பு கட்டைகளால் விபத்துகள் அதிகரித்தன. குறிப்பாக இரவில் சென்டர் மீடியன் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தொடர் விபத்தில் சிக்கினர்.

இதனையடுத்து இடைவெளிவிடப்பட்ட இடங்களில் அரை அடி தடுப்பு கட்டைகள் கற்கள் வைத்து சமாளிக்கப்பட்டது. தற்போது இ.சி.ஆரில் பேட்ஜ் ஒர்க்குடன் புதிதாக சாலை போடப்பட்டுள்ள சூழ்நிலையில் பல இடங்களில் அரை அடி தடுப்பு கட்டைகள் உயரம் குறைந்துவிட்டது.

சாலையில் தடுப்பு கட்டைகள் இருப்பது தெரியாமல் இரவு நேரத்தில் மீண்டும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. சாலை சமமாக உள்ள தடுப்பு கட்டைகளில் வாகனங்கள் ஏறி இறங்கி விபத்தில் சிக்குகின்றன.

3 அடி உயர சென்டர் மீடியனும், அரை அடி உயர தடுப்பு கட்டை கற்களும் சந்திக்கும் இடங்கள் எல்லாம் கற்கள் சிதறி உருக்குலைந்து காணப்படுகின்றன.

வாகன ஓட்டிகள் கூறுகையில், 'சிறிய உயரத்துடன் தடுப்பு கட்டைகள் இருப்பது இரவில் வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரியவில்லை. சிறிது கவனம் சிதறினாலும், தடுப்பு கட்டையில் உரசி விபத்துகள் நடக்கின்றன.

எனவே சாலையில் புதைந்துள்ள அரை அடி தடுப்பு கட்டையை முற்றிலும் அகற்றிவிட்டு, 3 அடி உயரத்திற்கு சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us