/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: அனிபால் கென்னடி
/
மீனவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: அனிபால் கென்னடி
மீனவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: அனிபால் கென்னடி
மீனவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: அனிபால் கென்னடி
ADDED : ஆக 14, 2024 05:54 AM
புதுச்சேரி : 'மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்' என, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பேசினார்.
மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். கடற்கரை மண்டல ஒழுங்காற்று ஆணையம் என்ற பெயரில் மீனவ மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு அரசு துணை போக கூடாது.
மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். மீனவர் நல வாரியம் அமைக்க வேண்டும். வம்பாகீரப்பாளையம் பகுதியில் துண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான காலை சிற்றுண்டி திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும். மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
புதுச்சேரியில் வாடகை குற்றவாளிகள் பெருகி விட்டனர். போதை பொருட்கள் விற்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
உப்பளம் தொகுதியில் 4 இடங்களில் போலீஸ் பூத் அமைக்க வேண்டும். ஏ.எப்.டி., பாரதி, சுதேசி மில்கள் மற்றும் கூட்டுறவு நுாற்பாலைகளை ஒன்றிணைத்து ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும். மிக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை என்ற புதிய துறையை உருவாக்க வேண்டும்.
சிறுபான்மை மக்களுக்கு திட்டங்களை கொண்டு வர வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

