/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதி ஆங்கில பள்ளியில் சுதந்திர தின விழா
/
பாரதி ஆங்கில பள்ளியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2024 05:40 AM

திருக்கனுார்: சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 78வது சுதந்திர தின விழா நேற்று நடந்தது.
தலைமை ஆசிரியை சுசீலா சம்பத் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பொறுப்பாசிரியர்கள் சிவபாலன், லலிதா, ஜோதிலட்சுமி வரவேற்றனர்.
ஆசிரியர்கள் நவீன்ராஜ், விஷ்வா ஆகியோர் மாணவர்களின் அணிவகுப்பை நடத்தினர். சுதந்திர போராட்ட வரலாற்றினை நினைவு கூறும் வகையில் ஆசிரியர்கள் விஜயகுமார், கவிதா ஆகியோர் பேசினர்.
மாணவர்கள் பங்கேற்ற பரதம், மாறுவேடம், நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மோகன்குமார் நன்றி கூறினார்.

