/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., அலுவலகத்தில் சுதந்திர தின விழா
/
என்.ஆர்.காங்., அலுவலகத்தில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: என்.ஆர்.காங்., தலைமை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி, தேசியக்கொடி ஏற்றினார். புதுச்சேரி, என்.ஆர்.காங்., அலுவலகத்தில், நேற்று சுதந்திர தின விழா நடந்தது. இதில், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.
மேலும் கட்சி அலுவலகத்தில் உள்ள, காந்தி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், ரமேஷ், செயலாளர் ஜெயபால், பொருளாளர் வேல்முருகன், துணைத்தலைவர் சபாபதி, பலராமன், ரேவதி பற்குணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.