/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தவளக்குப்பம் நேஷனல் பள்ளியில் சுதந்திர தின விழா
/
தவளக்குப்பம் நேஷனல் பள்ளியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2024 05:45 AM

பாகூர்: தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், சுதந்திர தின விழா நேற்று நடந்தது.
பள்ளி தாளாளர் டாக்டர் எழிலரசி கிரண்குமார் வரவேற்றார். பள்ளி சேர்மன் டாக்டர் கிரண்குமார் தேசியக் கொடியேற்றி வைத்தார் . தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.
இதில், மாணவர்கள் தேசத் தலைவர்கள் போல் வேடமணிந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பள்ளி மாணவர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக மும்மொழியில் உரையாற்றினர்.
மேலும், மாணவர்கள், யோகா, சிலம்பம் போன்றவற்றை செய்து காண்பித்து அசத்தினர். விழாவையொட்டி, பள்ளி மாணவ - மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியை உமா நன்றி கூறினார்.