/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனை அரசு பள்ளியில் சுதந்திர தின விழா
/
திருபுவனை அரசு பள்ளியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2024 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 78 வது சுதந்திரதின விழாம கொண்டாடப்பட்டது.
திருபுவனையில் நடந்த நிகழ்ச்சிக்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமையேற்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேசிய கொடிகளை வழங்கி, அனைவரும் தங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலைப் பொறியாளர்கள் மனோகரன், ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இளநிலைப் பொறியாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

