/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கட்டண உயர்வை கண்டித்து இண்டியா கூட்டணி பேரணி: தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா
/
மின் கட்டண உயர்வை கண்டித்து இண்டியா கூட்டணி பேரணி: தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா
மின் கட்டண உயர்வை கண்டித்து இண்டியா கூட்டணி பேரணி: தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா
மின் கட்டண உயர்வை கண்டித்து இண்டியா கூட்டணி பேரணி: தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா
ADDED : செப் 03, 2024 06:28 AM

புதுச்சேரி : மின் கட்டண உயர்வை கண்டித்து தலைமை செயலகத்தை நோக்கி முற்றுகையிட பேரணியாக சென்ற இண்டியா கூட்டணி தலைவர்கள் உள்பட 1127 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் 2ம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து. அதையடுத்து, இண்டியா கூட்டணி கட்சியினர் புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலையம் அருகேயுள்ள அண்ணாசிலை முன்பு காலை 9 மணியளவில் திரண்டனர்.
தொடர்ந்து மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், சி.ஐ.டி.யூ., நிர்வாகி சீனிவாசன், ம.தி.மு.க., நிர்வாகி ேஹமாபாண்டுரங்கன், தலைமையில் பேரணியாகப் புறப்பட்டனர்.
அண்ணாசாலை, நேரு வீதி வழியாக தலைமைச் செயலகம் செல்ல முயன்ற அவர்களை நேரு வீதி, கேண்டீன் குறுக்கு தெரு சந்திப்பில் எஸ்.பி., லட்சுமிசவுஜன்யா தலைமையிலான 700க்கும் மேற்பட்ட போலீசார் பேரிகார்டுகளை போட்டு தடுத்து நிறுத்தினர்.
அந்த தடுப்புகளை இண்டியா கூட்டணியினர் தள்ளிவிட முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆவேசமடைந்த இண்டியா கூட்டணியினர் தடுப்புகள் மீதேறி நின்று அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.
பின்னர் தடுப்பு பக்கவாட்டில் நுழைந்து தலைமை செயலகம் நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்ற முயன்றனர். அப்போது இண்டியா கூட்டணி தலைவர்களும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 1127 பேரை, போலீசார் கைது செய்து பட்டேல் சாலையில் எஸ்.எஸ் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். பின், 12.15 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இண்டியா கூட்டணி போராட்டத்தால் நகரம் முழுவதும் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போராட்டத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி., சிவக்குமார், கந்தசாமி, ஷாஜகான், விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், பாலன், சீனியர் காங்., துணை தலைவர் தேவதாஸ், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, மகளிர் காங்., தலைவி பஞ்சகாந்தி, காங்., நிர்வாகிகள் சங்கர், தனுசு, ரகுமான், இளையராஜா, வினோத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அபி ேஷகம், சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா, கீதநாதன், மா.கம்யூ., நிர்வாகிகள் பெருமாள், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.