/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2047ல் இந்தியா சூப்பர் பவர் நாடாகும்! ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
/
2047ல் இந்தியா சூப்பர் பவர் நாடாகும்! ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
2047ல் இந்தியா சூப்பர் பவர் நாடாகும்! ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
2047ல் இந்தியா சூப்பர் பவர் நாடாகும்! ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
ADDED : ஏப் 09, 2024 05:03 AM

நாமக்கல் : ''வரும் 2047ல் உலக அளவில் பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் இந்தியா சூப்பர் பவர் நாடாக மாறும்,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
நாமக்கல் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து, நாமக்கல்லில் பா.ஜ., சார்பில், 'ரோடு ஷோ' நடந்தது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், திறந்த ஜீப்பில் நின்றபடி பொதுமக்களை பார்த்து கையசைத்து, தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
வரவேற்பு
நாமக்கல் - சேலம் சாலையில் துவங்கி, நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் வரை, 1 கி.மீ., துாரத்திற்கு, சாலையின் இருபுறமும் திரளான பா.ஜ.,வினர் மற்றும் பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோவில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
தமிழ் கலாசாரம் மிகச்சிறந்த பாரம்பரியம் மிக்க கலாசாரம். காங்., ஆட்சியில், 70 ஆண்டுகளில் இந்தியாவுக்கு செய்ய முடியாத பல நலத்திட்டங்களை, பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளார்.
அதனால், மோடிக்கு உலக அளவில் உள்ள தலைவர்கள் அனைவரும் மரியாதை தருகின்றனர். 2014க்கு முன், இந்தியா பொருளாதாரத்தில் உலக அளவில், 11வது இடத்தில் இருந்தது; தற்போது, ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது.
உலகில் மிகப்பெரிய நாடுகள் எல்லாம், நமக்கு பின்னால் இருக்கின்றன. வரும் 2027ல், இந்திய பொருளாதாரம் உலக அளவில் மூன்றாவது இடத்திற்கு வருவது உறுதி. 2019 லோக்சபா தேர்தலில், 303 இடங்கள் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தோம்.
இந்த தேர்தலில், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்பது உறுதி.
ஆசீர்வாதம் அளிப்பார்
தமிழகத்தில், தி.மு.க., - காங்., கட்சிகள் வாரிசு அரசியல் நடத்திக் கொண்டு, 'இண்டியா' கூட்டணி அமைத்து, தங்கள் குடும்பம் முன்னேற பாடுபடுகின்றன. நம் தேசிய ஜனநாயக கூட்டணி, பிரதமர் மோடி தலைமையில் நாடு முன்னேற பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதாக கூறினோம்; கட்டி முடித்தோம். குடிசையில் இருந்த குழந்தை ராமர், இப்போது பிரமாண்டமான கோவிலுக்குள் வந்து, இந்தியாவில் ராம ராஜ்யம் அமைக்க நமக்கு ஆசீர்வாதம் அளிப்பார்.
அரசியல் சட்டம் 370வது பிரிவை நீக்கி, ஜம்மு - காஷ்மீருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். முத்தலாக் முறையை ரத்து செய்து, முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளோம். பா.ஜ., இதுவரை அளித்த உறுதிமொழிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது.
தற்போது அளிக்கும் உறுதிமொழிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். எந்த விதத்திலும் இந்தியா தாழ்ந்த நாடு அல்ல. நாம் உலக அளவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. யார் வாலாட்டினாலும், நாம் நறுக்கி விடுவோம்.
நம் விமானப்படை, தரைப்படையில் உள்ள அனைத்து ராணுவப் பிரிவுகளும் மிகவும் பலம் மிக்கவை.
நாமே தயாரிக்கிறோம்
முன்னர் ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். தற்போது, எவ்வித ராணுவ தளவாடங்களும் இறக்குமதி செய்யப்படுவதில்லை.
போர் விமானங்கள், விமான இன்ஜின்கள், ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர்கள் போன்ற அனைத்து தளவாடங்களையும் நாமே தயாரித்து வருகிறோம். குறிப்பாக, ஏற்றுமதி செய்யவும் தயாராகி வருகிறோம்.
பிரதமர் மோடி தலைமையில், 2047ல் இந்தியா பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் சூப்பர் பவர் நாடாக மாறுவது உறுதியாகி விட்டது.
தமிழகத்தில் உதயநிதி ஹிந்து மதத்தை அவமதித்துள்ளார். சனாதன தர்மம் என்பது டெங்கு, மலேரியா கொசு மாதிரி; அவை ஒழிக்கப்பட வேண்டும் என கூறினார்.
இப்படிப்பட்ட வெட்கக்கேடான விமர்சனங்களுக்கு தி.மு.க.,வை மன்னிக்க வேண்டுமா?
இவ்வாறு அவர் பேசினார்.

