ADDED : ஜூலை 17, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பாரதிய மஸ்துார் சங்கம் (பி.எம்.எஸ்) சார்பில், இந்தியன் காபி ஹவுஸ் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம், பி.எம்.எஸ். அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. சங்கத்தின் நிர்வாக ஆலோசகராக ரவுத்திரம் சக்திவேல் நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, இந்தியன் காபி ஹவுஸின் வளர்ச்சி, தொழிலாளர் நலன், வணிக மேம்பாடு, சேவையின் தர உயர்வு மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதில், பி.எம்.எஸ். நிர்வாகிகள், இந்தியன் காபி ஹவுஸ் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
