/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய கம்யூ., கட்சி தொகுதி குழு கூட்டம்
/
இந்திய கம்யூ., கட்சி தொகுதி குழு கூட்டம்
ADDED : ஆக 31, 2024 02:23 AM
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என இந்திய. கம்யூ., வலியுறுத்தியுள்ளது.
இந்திய. கம்யூ., உழவர்கரை தொகுதி குழு கூட்டம் அஜீஸ் நகர் சுப்பையா மன்றத்தில் நடந்தது.
சிவராஜ் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் அன்பழகன் நடந்த பணிகளை பட்டியலிட்டார். தேவசகாயம் மாநில குழு முடிவுகள் குறித்து கலந்துரையாடினார். கூட்டத்தில், இந்திரா சிக்னல் முதல் மூலக்குளம் வரை புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும். வாகன நிறுத்தம் இல்லாத வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பிச்சவீரன்பட்டில் புதிதாக விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.