/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய கம்யூ., ஏம்பலம் தொகுதி குழு கூட்டம்
/
இந்திய கம்யூ., ஏம்பலம் தொகுதி குழு கூட்டம்
ADDED : பிப் 27, 2025 06:24 AM
பாகூர்; ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என, இந்தியகம்யூ., ஏம்பலம் தொகுதி குழு வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூ., ஏம்பலம் தொகுதி குழு கூட்டம், குடியிருப்புப்பாளையம் ஆனந்தவள்ளி இல்லத்தில் நடந்தது. தொகுதி குழு உறுப்பினர் சுமதி தலைமை தாங்கினார்.செயலாளர் பெருமாள் விளக்க உரையாற்றினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் அமுதா, எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார். விவசாய சங்க தலைவர் மாசிலாமணி, கிளை செயலாளர்கள் பாலாஜி,செல்வமணி, கணபதி, கிருஷ்ணமூர்த்தி, முருகன், மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், குடியிருப்புப்பாளையம் சுப்பையா நகர் முதல் பின்னாச்சிக்குப்பம் வரையிலான தார் சாலையை புதுபிக்க வேண்டும். குடியிருப்புபாளையத்தில் கழிவு நீர் வாய்க்கால் கட்ட வேண்டும்.ரேஷன் கடைகளை திறந்து 16 வகையான அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்.விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலை பின்னாச்சிக்குப்பம் சந்திப்பில் மேம்பாலம் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைளை வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.