/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய மருத்துவ சங்கம் தொடர் கருத்தரங்கம்
/
இந்திய மருத்துவ சங்கம் தொடர் கருத்தரங்கம்
ADDED : மே 13, 2024 05:11 AM

புதுச்சேரி: இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை சார்பில் தொடர் மருத்துவ கருத்தரங்கம்,நேற்று நடந்தது.
செண்பகா ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைவர் சுதாகர்,பொது செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிகழ்ச்சியில் ஜெம் மருத்துவமனை சேர்மன் பழனிவேலு,இயக்குனர் பிரவீன்ராஜ்,சீனியர் மருத்துவர்கள் சசிகுமார்,சுகுமாறன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கருத்தரங்கின் முதல் சிறப்பு அமர்வில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கடந்து வந்த பாதையும் என்ற தலைப்பில் ஜெம் மருத்துவமனை டாக்டர் மேக்னஸ் ஜெயராஜ் பேசினார்.
இரண்டாவது சிறப்பு அமர்வில்,கல்லிரல் மற்றும் பித்தநீர் பாதை நோய்களில் எண்டோஸ்கோபிக் புதிய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் டாக்டர் வினோத்குமார் பேசினார்.தொடர்ந்து கல்லீரல் நோய்களில் ஏற்பட்டுள்ள நவீன சிகிச்சை முறைகள் குறித்த சந்தேகங்களுக்கு இருவரும் விளக்கம் அளித்தனர்.
புதுச்சேரியின் பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.