/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய தொழிற் சங்க மையம் பெருந்திரள் போராட்டம்
/
இந்திய தொழிற் சங்க மையம் பெருந்திரள் போராட்டம்
ADDED : ஜூலை 10, 2024 10:00 PM

புதுச்சேரி: இந்திய தொழிற் சங்க மையம் - சி.ஐ.டி.யு., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் போராட்டம் நடந்தது.
சுதேசி மில் எதிரே நடந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சீனிவாசன், முருகன், கொளஞ்சியப்பன், ராமசாமி, மதிவாணன், தினேஷ்குமார், ராஜ்குமார், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது தொழிலாளர் போராடி பெற்ற சட்டங்களை மாற்றுவதை கைவிட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஏ.எப்.டி., சுதேசி, பாரதி பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து ஜவுளி பூங்கா உருவாக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் மாறினாலும், அதே ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்ற சட்டத்தை உருவாக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களில் சொத்துகளை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். அமுதசுரபி, பாசிக், பாப்ஸ்கோ, பான்டெக்ஸ் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களுக்கு சம்பள பாக்கி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது.