ADDED : ஆக 09, 2026 09:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: இந்திய இளைஞர் காங்., துவக்க நாள் விழா புதுச்சேரி பிரதேச காங்., கமிட்டி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கி, காங்., கொடியேற்றி உறுதிமொழி எடுத்து, நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், காங்., கமிட்டி தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., சட்டமன்ற தலைவர் கார்த்திகேயன், கந்தசாமி, ஆனந்தராமன், பாலன், பொது செயலாளர்கள் தனுசு, திருமுருகன், செந்தில், இளைஞர் காங்., நிர்வாகிகள் பிரியா, வினோத், சையத், அய்யப்பன்(எ)அஜித், அத்வானி, சித்தானந்தம், ஹரிஷ், ஜெயேந்திரன், கமலேஷ், சமீர், ஜமீல், சிவசங்கர், ஜனா, விக்னேஷ், தினேஷ், பாண்டுரங்கன், மனோஜ்குமார் உட்பட மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
