/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.என்.டி.யூ.சி., செயற்குழு கூட்டம்
/
ஐ.என்.டி.யூ.சி., செயற்குழு கூட்டம்
ADDED : மே 03, 2024 06:23 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநில ஐ.என்.டி.யூ.சி., சார்பில், 139வது மே தினம் விழா மற்றும் ஐ.என்.டி.யூ.சி., 45வது செயற்குழு கூட்டம் ரெட்டியார்பாளையம் ஐஸ்வர்யம் ஓட்டலில் நடந்தது.
மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். முன்னாள் துணை சபாநாயகர் பாலன், மாநில காங்., செயலாளர்கள் ராஜாராம், லோகையன், புதுச்சேரி மாணவர் காங்., தலைவர் அர்ஷவர்த்தனன், ராஜ்பவன் தொகுதி வட்டார காங்., தலைவர் ஜெரால்ட், இளைஞர் காங்., தெற்கு மாவட்ட தலைவர் செல்வ பிரியன், இளைஞர் காங்., அரியாங்குப்பம் தொகுதி தலைவர் தமிழழகன், மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநில ஐ.என்.டி.யூ.சி., நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஞானசேகரன், நரசிங்கம், முத்துராமன், கணேஷ்குமார், பன்னீர், சபரி, தீனதயாளன், ஜான்சன், கிருஷ்ணமூர்த்தி, முத்து, ஆரோக்கிய கலைமதி, பாண்டியன், சகாயராஜ், உத்தரகரமூர்த்தி, மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.