/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு திடல் அமைக்கும் பணி துவக்கம்
/
விளையாட்டு திடல் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 18, 2024 07:21 AM
நெட்டப்பாக்கம், : பண்டசோழநல்லுார் அரசு நடுநிலைப் பள்ளிக்கு விளையாட்டு திடல் அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பண்டசோழநல்லுார் அரசு நடுநிலைப் பள்ளிக்கு விளையாட்டு திடல் மற்றும் சுற்றுச்சுவர் ரூ. 1 கோடியே 18 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், கல்வித் துறை விளையாட்டு மற்றும் இளைஞர் நல துணை இயக்குநர் வைத்தியநாதன், பொதுப்பணித் துறை சிறப்புக் கட்டட கோட்டம் 2 செயற்பொறியாளர் சுப்புராயன், விளையாட்டு மற்றும் இளைஞர் நல திட்ட பொறுப்பாளர் ஆனந்தன், இளநிலைப்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பா.ஜ., மாநில துணைத் தலைவர் கல்வியாளர் பிரிவு வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.