/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பதிவு பெற்ற மீன்பிடி விசைப்படகுகளை கணக்கெடுக்கும் பணி துவக்கம்
/
பதிவு பெற்ற மீன்பிடி விசைப்படகுகளை கணக்கெடுக்கும் பணி துவக்கம்
பதிவு பெற்ற மீன்பிடி விசைப்படகுகளை கணக்கெடுக்கும் பணி துவக்கம்
பதிவு பெற்ற மீன்பிடி விசைப்படகுகளை கணக்கெடுக்கும் பணி துவக்கம்
ADDED : மே 14, 2024 05:06 AM

புதுச்சேரி: தேங்காய்திட்டு, உப்பளம் துறைமுகத்தில் பதிவு பெற்ற மீன்பிடி விசைப்படகுகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
அனைத்து கடலோர பகுதி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தற்போது நடைமுறையிலுள்ள மீன்பிடி தடை காலத்திற்குள், அனைத்து பதிவு பெற்ற மீன்பிடி படகுகளையும் கள ஆய்வு செய்து, அதற்கேற்றாற்போல் இணையதள பக்கத்தை புதுப்பித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசின் மீன்வள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம், உப்பளம் துறைமுகத் திலுள்ள மீன்பிடி விசைப்படகுகளை, மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்கள் நலச்சங்கங்கள் ஒத்துழைப்புடன் கள ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மீன்வளத்துறை அலுவலர்கள் அடங்கிய ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது.
மீன்வளத்துறையின் துணை இயக்குனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் நடந்த இப்பணியை, மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் ஆய்வு செய்து,ஆலோசனைகளை வழங்கினார்.
கள ஆய்வின்பொழுது, சம்மந்தப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் படகு சம்பந்தப்பட்ட ஆவணங்களை காண்பித்தனர்.
இந்த ஆய்வில் காண்பிக்கப்படாத மீன்பிடி படகுகளின் மீது தனியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையிலேயே அப்படகுகளுடைய பதிவு தொடரப்படும் அல்லது நீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் இது போன்ற கணக்கெடுக்கும் பணி மேற் கொள்ளப்பட உள்ளது.

