/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெட்டப்பாக்கம் மருத்துவமனையில் சுகாதாரத்துறை இயக்குனர் ஆய்வு
/
நெட்டப்பாக்கம் மருத்துவமனையில் சுகாதாரத்துறை இயக்குனர் ஆய்வு
நெட்டப்பாக்கம் மருத்துவமனையில் சுகாதாரத்துறை இயக்குனர் ஆய்வு
நெட்டப்பாக்கம் மருத்துவமனையில் சுகாதாரத்துறை இயக்குனர் ஆய்வு
ADDED : மே 03, 2024 06:28 AM

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் ஆய்வு செய்தார். நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் காலை மருந்தாளர் பற்றாக்குறை காரணமாக, மாத்திரை வாங்க வந்த முதியோர்கள் பல மணி நேரம் காத்திருந்ததால் பலர் மயக்கமடைந்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு நேற்று காலை மருத்துமவனையில் திடீர் ஆய்வு செய்தார்.
பணியில் இருந்த டாக்டர், செவிலியர்களை அழைத்து மயக்கமடைந்த சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தார். மருந்தாளர் விடுப்பில் சென்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை உடனே செய்து கொள்ள வேண்டும். நோயாளிகளை பல மணி நேரம் காத்திருக்க வைக்க கூடாது. இனி இதுபோன்ற சம்பவம் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.
தொடர்ந்து வருகை பதிவேட்டினை ஆய்வு செய்த இயக்குனர், சி.சி.டி.வி., கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தார். அப்போது இயக்குனரிடம் பொதுமக்கள் மருத்துவமனையில் இரண்டு ஆம்புலன்ஸ் இருந்தும் டிரைவர்கள் இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில்லை என, குற்றம் சாட்டினர். அதற்கு இயக்குனர் இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் பார்த்து கொள்ளும்படி பணியில் இருந்த டாக்டரிடம் அறிவுறுத்தினார்.