/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., தேசிய பொறுப்பாளர் வந்த ஹெலிகாப்டரில் சோதனை
/
பா.ஜ., தேசிய பொறுப்பாளர் வந்த ஹெலிகாப்டரில் சோதனை
ADDED : ஏப் 14, 2024 04:51 AM

காரைக்கால்: காரைக்காலில், பா.ஜ., தேசிய பொறுப்பாளர் வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் கொடுப்பதை தடுத்திட காரைக்காலில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காரைக்காலில் நடந்த பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தேசிய பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தனி ஹெலிகாப்டர் மூலம், புதுச்சேரியிலிருந்து காரைக்கால் வரிச்சிக்குடி பாலிடெக்னிக் கல்லுாரி மைதானத்திற்கு வந்தார். அங்கிருந்து காரில் சென்று செயல்வீர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.
முன்னதாக, அவர் வந்த ஹெலிகாப்டரை, தேர்தல் துறை அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனை முழுதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

